பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிக்கு பாராட்டு
தென்மண்டல கூடைப்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழக அணியில் இடம் பெற்ற பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவியை பாராட்டினர்.
தென்மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி கேரளாவில் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தமிழக அணியில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி சோனாரேசலின் பங்கேற்று விளையாடினார். இதில் தமிழக அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.
தென்மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்ததை தொடர்ந்து, அடுத்த மாதம் (ஜனவரி) பெங்களூருவில் 18 வயதுக்குட்பட்டோருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க தமிழக அணி தகுதி பெற்றுள்ளது. இந்த அணியில் மாணவி ேசானாரேசலினனும் இடம் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் செந்தில்குமார், கணேஷ்குமார் ஆகியோரையும் என்.எஸ்.வி.வி. மெட்ரிக் பள்ளி தலைவர் பிரசன்னா, செயலர் கோபிநாத், பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.