குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா - ரூ.20 லட்சம் செலவில் ஏற்பாடுகள் தீவிரம்


குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா - ரூ.20 லட்சம் செலவில் ஏற்பாடுகள் தீவிரம்
x

தசரா திருவிழாவை முன்னிட்டு 20 லட்சம் ரூபாய் செலவில் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் திருவிழா நடைபெற இருக்கிறது.

குலசேகரப்பட்டினத்தில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவிற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குலசை தசரா குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தசரா திருவிழாவை முன்னிட்டு 20 லட்சம் ரூபாய் செலவில் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோவில் வளாகத்தின் முன்பு பந்தல் அமைத்தல், கடற்கரை ஒட்டிய பகுதிகளில் லைட் டவர்கள் அமைத்தல், காவல், தீயணைப்பு, மருத்துத்துறையினருக்கு கூடாரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தர இருப்பதால், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் சீரமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன.


Next Story