குளத்தூர் முத்துஸ்வாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
குளத்தூர் முத்துஸ்வாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரில் முத்துஸ்வாமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. அதன்படி தற்போது நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர். அதில் மாணவி செல்வி 500-க்கு 482 மதிப்பெண்களும், மாணவி சங்கவி 478 மதிப்பெண்களும், மாணவி ஜீவதர்ஷினி 477 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி சங்கவி அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மற்றும் முதல்வர் டாக்டர் சக்திவேலு, தாளாளர் ஜெயந்தி சக்திவேலு மற்றும் ஆசிரியர்கள் புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.