தட்சண காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தட்சண காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் தட்சண காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தட்சண காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 29-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி யாகசாலையில் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, யாத்ராதானம் நடந்தது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், இரவு மகாபிஷேகமும், சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story