திருப்பூர் திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

திருப்பூர் திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
x

திருப்பூர் திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

மாகாளியம்மன் கோவில்

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரம் வடக்கு பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர், மாகாளியம்மன், முருகன், துர்க்கையம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகவிழா நடத்த கோவில் கமிட்டியினர் மற்றும் திருநீலகண்டபுரம் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதன்படி திருப்பணிகள் நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ந்தேதி காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம், கணபதி வேள்வியுடன் தொடங்கியது.

இதையடுத்து கோவிலில் தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலை 5 மணிக்கு 4-ம் கால யாகபூஜையுடன் தொடங்கியது. 7 மணிக்கு கலசங்கள் கோவிலை வலம் வருதல் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டும், அதைத் தொடர்ந்து விநாயகர், முருகன், மாகாளியம்மன், துர்க்கையம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அன்னதானம்

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் க.செல்வராஜ், கே.என்.விஜயகுமார், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர செயலாள டி.கே.டி. மு.நாகராசன், பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் சு.சிவபாலன், 19-வது வார்டு கவுன்சிலர் லதா கேபிள்மோகன் உள்பட அரசியல் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 10 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் மற்றும் திருநீலகண்டபுரம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Tags :
Next Story