கூலித்தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல்லில், தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் குடைப்பாறைபட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 29). கூலித்தொழிலாளி. அவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். பன்னீர்செல்வத்துக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியாக வசித்ததால் ஏற்பட்ட விரக்தியில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





