வேன் மோதி தொழிலாளி பலி
வேன் மோதி தொழிலாளி பலியாகினார்.
வீ.மேட்டுப்பாளையம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா முத்தணம்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிராஜ் (வயது47). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தாயார் காளியம்மாளுடன் வசித்துக்கொண்டு வெள்ளகோவிலில் தறி ஓட்டும் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது மொபட்டில் வெள்ளகோவில்-மூலனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரட்டுப்பாளையம் அருகே உள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் ஜோதிராஜ் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜோதிராஜை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜோதிராஜ் இறந்துவிட்டதாக கூறினர். விபத்து பற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
=============