வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்


வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
x

வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதன்படி ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட பார் அசோசியேசன் தலைவர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் வேலுச்சாமி, துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும், வக்கீல் சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். ஜாக் அமைப்பின் தலைவர் மீது தமிழக பார் கவுன்சில் மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை திரும்பபெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதேபோல் பவானி, கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி, பெருந்துறை என மாவட்டம் முழுவதும் அந்தந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story