வக்கீல்கள் உண்ணாவிரதம்
ராமநாதபுரத்தில் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
ரமத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் வக்கீல்கள் சங்கம் தலைமை ஏற்று நடத்திய இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை, ராமேசுவரம், கடலாடி ஆகிய வக்கீல்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் சேக்இப்ராகிம் தலைமை தாங்கினார். செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு முன்னிலை வகித்தனர்.
வக்கீல்கள் ரவிச்சந்திரன், நம்புநாயகம், வடிவேல், தலைவர்கள் முதுகுளத்தூர் ராஜசேகர், செயலாளர் சிவராமகிருஷ்ணன், திருவாடானை செயலாளர் சுரேஷ், பரமக்குடி தலைவர் சேதுபாண்டியன், கடலாடி தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து வக்கீல்களும் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story