வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2023 1:30 AM IST (Updated: 6 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில் வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் வக்கீல் பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். அதேபோல் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல் சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story