வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் கோர்ட்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பார் கவுன்சில் கூட்டமைப்பு துணைத்தலைவர் ஏ.ஞானமோகன் தலைமை தாங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். செயலாளர் எம்.முத்தமிழ் செல்வி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் உதவி செயலாளர்கள் சி.சத்தியமூர்த்தி, ஏ.ஆனந்தகுமார், எம்.கபிலன், என்.நந்திவர்மன் ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். வழக்கறிஞர்கள் ஆர்.ஆர்.மனோகரன், எம்.சிவானந்தன், கே.முத்துசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் பி.பால மணவாளன் நன்றி கூறினார்.


Next Story