பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய சென்னையைக் கொண்டாடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையே நமது சமத்துவபுரம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய சென்னையைக் கொண்டாடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

385-வது சென்னை தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை. இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம். பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com