ஒளி, ஒலி பதிவாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஒளி, ஒலி பதிவாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம்;
விழுப்புரத்தில் நகர மற்றும் வட்டார ஒளி, ஒலி பதிவாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் சங்க தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் செல்வம் சிறப்புரையாற்றினார். பொருளாளர் ராஜசேகர், துணைத்தலைவர் மோகன் உள்ளிட்டோர் ஆலோசனை வழங்கி பேசினர். இதில் நிர்வாகிகள் சுகுமார், ஸ்ரீதர், திருசங்கு, இளங்கோ, பாலு, வைத்தியநாதன், மதி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒளி, ஒலி அமைப்பு தொடர்பாக விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு வாடகை கட்டணத்தை உயர்த்தி அதற்கான பட்டியலை சங்கத்தினர் வெளியிட்டனர். மேலும் சங்க செயல்பாடுகளில் கலந்துகொள்ளாமல் நீண்ட காலமாக உள்ளவர்களை சங்கத்திலிருந்து நீக்கியும், புதிய நிர்வாகிகளை சேர்த்தும் சங்க உறுப்பினர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து, ஒலிபெருக்கிகள், ஜெனரேட்டர், மின்விளக்கு அலங்காரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து அதற்கான அட்டைகளை வெளியிட்டனர்.