மோட்டார் சைக்கிளில் மது கடத்தியவர் கைது


மோட்டார் சைக்கிளில் மது கடத்தியவர் கைது
x

மோட்டார் சைக்கிளில் மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணி மேற்கொண்டனர். ஜி.என்.செட்டி தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவர் மது பாட்டில்கள் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர் ஆரணி சுப்பிரமணிய நகரை சேர்ந்த முத்து (வயது 34) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story