வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ.11 லட்சம் கடன் உதவி; கலெக்டர் வழங்கினார்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ.11 லட்சம் கடன் உதவி; கலெக்டர் வழங்கினார்
x

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ.11 லட்சம் கடன் உதவி; கலெக்டர் வழங்கினார்

ஈரோடு

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் செய்யும் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பெண்களுக்கு ரூ.11 லட்சத்துக்கான காசோலையை வழங்கி பேசினாா். அப்போது அவர் கூறும்போது, "தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திட்டம் ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய வட்டாரங்களில் உள்ள 77 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் புதிய தொழில் செய்ய உள்ளவர்களுக்கும், ஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்தவும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக நுண் நிதி நிறுவன கடனாக 20 பேருக்கு ரூ.11 லட்சம் வழங்கப்பட்டது", என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அதிகாரி சதீஸ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story