சிறு, குறுந்தொழில்களுக்கு ஜாமீன் இல்லாமல் ரூ.40 லட்சம் வரை கடன் - அரசு செயலாளர் தகவல்

சிறு, குறுந்தொழில்களுக்கு ஜாமீன் இல்லாமல் ரூ.40 லட்சம் வரை கடன் - அரசு செயலாளர் தகவல்
x

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் 26-வது ஆண்டு மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சங்க தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. முன்னாள் தலைவர் பாபு வரவேற்றார்.

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், 'ஜாமீன் எதுவும் இல்லாமல் ரூ.40 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழகத்தில்தான் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் மத்திய அரசின் தொழில் குழும பொது சேவை மையங்கள் அமைந்துள்ளன' என்றார்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, 'தற்போது நிலவி வரும் தொழில்துறை போட்டிகளில் வெற்றி பெற உற்பத்தி செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கினால் மட்டுமே உள்நாட்டிலும், உலக சந்தையிலும் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும்' என்றார்.

முடிவில், சங்க பொதுச்செயலாளர் வே.நித்தியானந்தம் நன்றி

Next Story