சாலை தடுப்பு மீது லாரி மோதி விபத்து


சாலை தடுப்பு  மீது லாரி மோதி விபத்து
x
தினத்தந்தி 11 July 2023 3:59 PM IST (Updated: 12 July 2023 5:20 PM IST)
t-max-icont-min-icon

சாலை தடுப்பு மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானது.

திருப்பூர்

பல்லடம்,

பல்லடம் போலீஸ் நிலையம் எதிரே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்காக டேங்கர் லாரி வந்தது. இந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்பு கற்கள் மீது மோதி நின்றது. அப்போது எதிரே கோவையிலிருந்து அரியலூர் செல்வதற்காக வந்த கான்கிரீட் லாரி, அந்த லாரி மீது மோதாமல் இருக்க அதன் டிரைவர் இடது பக்கமாக லாரியை திருப்பி உள்ளார். அப்போது அங்கிருந்த வேன் மீது ரெடிமிக்ஸ் லாரி மோதியது. இதில் வேனுக்கு லேசான சேதம் ஏற்பட்டது. இதையடுத்து டேங்கர் லாரி டிரைவர் சேலம் ஆத்தூரை சேர்ந்த ராம்குமார்(வயது 37) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தின் போது கோவை-திருச்சி தேசிய நெடுஞசாலையில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story