மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கணிசமாக உயர்வு..!


மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கணிசமாக உயர்வு..!
x

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

மதுரை,

மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில். அதற்கு அடுத்தபடியாக வருவது மதுரை மல்லிகைப்பூ. மதுரை மல்லிகைப்பூவிற்கு எப்போதும் தனி மவுசு உண்டு. திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் அதனுடைய விலை உச்சத்தை தொடும்.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. விற்பனைக்கு போக, மீதமுள்ள பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, மதுரை மல்லி கிலோ ரூ.200ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. முல்லை பூ கிலோவுக்கு ரூ.400, பிச்சி பூ கிலோவுக்கு ரூ.500, சம்மங்கி ரூ.120-க்கும், பட்டன் ரோஸ் ரூ.200-க்கும், மரிக்கொழுந்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story