கர்நாடக எல்லையில் முகாமிட்டுள்ள மக்னா யானை


கர்நாடக எல்லையில் முகாமிட்டுள்ள மக்னா யானை
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா எல்லையில் முகாமிட்டுள்ள மக்னா யானையை கும்கி யானைகள் உதவியுடன் இரவு பகலாக வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

கர்நாடகா எல்லையில் முகாமிட்டுள்ள மக்னா யானையை கும்கி யானைகள் உதவியுடன் இரவு பகலாக வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பி.எம்.2. காட்டு யானை

கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த பி.எம்.2 காட்டு யானையை (மக்னா யானை) கடந்த 8-ந் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி சீகூர் சரக காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியில் விட்டனர்.

தொடர்ந்து ரேடியோ காலர் மூலம் கிடைக்கும் சிக்னலை வைத்து வனத்துறையினர் பி.எம்.2. காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். பல இடங்களில் சிக்னல் கிடைக்காததால் காட்டு யானையை தொடர்ந்து கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் மாயாறு, மசினகுடி வனத்துக்குள் காட்டு யானை இடம் பெயர்ந்து கூடலூர் நோக்கி வருவது தெரியவந்தது.

தீவிர கண்காணிப்பு

இதைத்தொடர்ந்து 9 கும்கி யானைகள், 60-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கூடலூருக்குள் பி.எம்.2. காட்டு யானை நுழையாமல் தடுக்க முதுமலை தெப்பக்காடு பகுதியில் கும்கி யானைகளை ஆங்காங்கு நிறுத்தி வைத்து கண்காணித்து வந்தனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை தமிழக- கர்நாடகா எல்லையான கக்கநல்லா வனப்பகுதிக்கு சென்றது தெரிய வந்தது.

இதனால் இரவு பகலாக சுழற்சி முறையில் வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் கர்நாடகா மாநில வனத்துக்குள் காட்டு யானை சென்றது. இதனால் வனத்துறையினர் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் மீண்டும் மாநில எல்லையான கக்கநல்லா வனத்துக்குள் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று 4-வது நாளாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story