பராமரிப்பு பணிகள்: பழனி கோவிலில் இன்று ரோப் கார் சேவை ரத்து

பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
பராமரிப்பு பணிகள்: பழனி கோவிலில் இன்று ரோப் கார் சேவை ரத்து
Published on

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின் இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன.

இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் 3 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்வதால் பெரும்பாலானோர் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோப் கார் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

அதன்படி, இன்று பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com