8 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் விளைச்சல் பாதிப்பு


8 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் பகுதியில் படைப்புழு தாக்குதலால் 8 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் பகுதியில் 8 ஆயிரம் ஏக்கர் மக்காச் சோளப் பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் படைப்புழு தாக்கியதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மக்காச்சோளம் விவசாயம்

விளாத்திகுளம் பகுதியில் மானாவாரிப் பயிராகவும், தோட்டப்பயிராகவும் மக்காச்சோளம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. இப்பகுதியில் ஆண்டுதோறும் மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு வேளாண்மை துறை சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவற்றின் படி, விவசாயிகள் மருந்து தெளித்தாலும், படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

படைப்புழு தாக்குதல்

இந்தாண்டு மக்காச்சோளப் பயிரில் அதிகாரிகள் ஆலோசனைப்படி, மூன்று முறை மருந்து தெளித்தும் விளைந்த மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கியுள்ளது. இதனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராகி இருக்கும் 8 ஆயிரம் ஏக்கர் பயிர்களிலும் மக்காச்சோளம் வீணாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் அறுவடை நேரத்தில் பயிரில் படைப்புழு தாக்கி விளைச்சலை பாதித்து வந்தது. இந்த ஆண்டு 3 முறை மருந்து தெளித்தும் அறுவடை செய்யும் நிலையில், படைப்புழு தாக்கியதில் மக்காச்சோளம் கருகி வீணாகிவிட்டது. இதனால் அறுவடை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விளாத்திகுளம் வேளாண்மை துறை அதிகாரிகள் படைப்புழு தாக்கத்தினால் பாதிப்படைந்த மக்காச்சோளம் பயிர்களை உடனடியாக ஆய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்து பயிர் காப்பீடு தொகையை வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.


Next Story