தர்மபுரி அருகேகிணற்றில் ஆண் பிணம்போலீசார் மீட்டு விசாரணை

தர்மபுரி அருகேகிணற்றில் ஆண் பிணம்போலீசார் மீட்டு விசாரணை
Published on

தர்மபுரி

தர்மபுரி செட்டிக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நேற்று மாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com