அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ஆண் பலி; யார் அவர்? போலீஸ் விசாரணை

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ஆண் உயிரிழந்தார்.
அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ஆண் பலி; யார் அவர்? போலீஸ் விசாரணை
Published on

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் சிவப்பு நிற சட்டையும், கருப்பு நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். ஆவடி ரெயில்வே போலீசார் பலியான ஆண் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com