மாங்கலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


மாங்கலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x

மாங்கலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி

லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமத்தில் மங்களாம்பிகை சமேத மாங்கலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக காலையில் 4-ம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து, 9.30 மணியளவில் அனைத்து கோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story