அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து!
ம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது;
"பாகுபாடு, உயர்வு தாழ்வு கூடாது என்பதைத் தம் கொள்கைகளின் அடிநாதமாகக் கொண்டு அந்தக் குறிக்கோளை எட்டுவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் செய்து வைத்துவிட்டுப் போயிருக்கும் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த நாளில் அன்னாரின் பாதையில் நடக்க உறுதியேற்போம்" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story