மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம்

மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம்
Published on

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு மாதந்தோறும் நடத்த கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 2023 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் மதுராந்தகம் வட்டம், நெட்ரம்பாக்கம் கிராமத்தில் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com