ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை களைகட்டியது


ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை களைகட்டியது
x
தினத்தந்தி 12 Oct 2022 3:54 AM IST (Updated: 12 Oct 2022 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை களை கட்டியது.

ஈரோடு


ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை களை கட்டியது.

ஜவுளி சந்தைகள்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, சென்ட்ரல் மார்க்கெட், கனிமார்க்கெட், அசோகபுரம் ஆகிய பகுதிகளில் ஜவுளிச்சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் இருந்து செவ்வாய்க்கிழமை வரை ஜவுளிச்சந்தை கூடுகிறது.

ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து கடைகள் அமைத்து உள்ளனர். இதேபோல் ஜவுளிகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில வியாபாரிகளும் வருகின்றனர்.

சாலையோர கடைகள்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் ஜவுளிச்சந்தை கூடியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிகளை வாங்குவதற்காக சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்தது. பொதுமக்கள் பலர் திரண்டு வந்து ஜவுளிகளை ஆர்வமாக வாங்கி சென்றார்கள்.

அங்கு சாலையோரமாகவும் கூடுதல் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

களை கட்டியது

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மொத்தமாக ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். கடந்த சில மாதங்களாக விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில், தீபாவளியையொட்டி விற்பனைகளை கட்டி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story