ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் குவிந்த வெளிமாநில வியாபாரிகள்


ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் குவிந்த வெளிமாநில வியாபாரிகள்
x

ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் குவிந்த வெளிமாநில வியாபாரிகள்

ஈரோடு

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள கனி மார்க்கெட் மற்றும் டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு ரோடு, ஆர்.கே.வி. ரோடு உள்ளிட்ட பகுதிகள், அசோகபுரம் பகுதியில் உள்ள பனியன் மார்க்கெட் ஆகிய ஜவுளி சந்தைகள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை நடந்தது. இந்த சந்தைகளுக்கு தமிழக வியாபாரிகளைவிட, பிற மாநில வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர்.

இதுகுறித்து ஜவுளி கடைக்காரர்கள் கூறும்போது, 'ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டிய மாநில வியாபாரிகள் அதிகமாக ஜவுளிகள் வாங்கி சென்றனர். கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து ஜவுளிகளை வாங்கினர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளதால் சீருடை, பள்ளிக்கூடத்துக்கு தேவையான பொருட்கள், புத்தகம், நோட்டு போன்றவற்றை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஜவுளிகள் வாங்க பொதுமக்கள் குறைவாகவே வந்தனர். மேலும் கோடை வெயில் தற்போது அதிகமாக இருப்பதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பகலில் கடைக்கு வருவதை தவிர்த்துள்ளனர். தற்போது மாலையிலும், இரவிலும் தான் வியாபாரம் நடக்கிறது. 40 சதவீதம் மொத்த விற்பனையும், 60 சதவீதம் சில்லரை விற்பனையும் நடந்தது' என்றனர்.


Next Story