வேலூர் மாவட்டத்தில் 2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

வேலூர் மாவட்டத்தில் 2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
Published on

வேலூர்

வேலூரை அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு நேற்று புகார்கள் வந்தன. அதன்பேரில் சைல்டுலைன், சமூகநலத்துறை அலுவலர்கள் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள மாணவிக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) மணமகன் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதேபோன்று அணைக்கட்டு தாலுகா பாட்டையூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு வருகிற 13-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபருடன் நடைபெற இருந்த திருமணமும் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது. 2 மாணவிகளின் பெற்றோரிடமும் பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 5 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com