பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி
பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர்
ஆண்டிமடம்:
ஆண்டிமடம் வட்டார வளமையத்தில் தற்காப்பு கலை (கராத்தே) பயிற்சி தொடக்க விழாவிற்கான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், வட்டார வள மைய முற்பார்வையாளர் அருமைராஜ் தலைமையில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் முனியம்மாள், சந்திரலேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரிய பயிற்றுனர் ஆசைத்தம்பி வரவேற்றார். தற்காப்பு கலை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சத்தியபாமா பேசினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ரமேஷ், உத்திராபதி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை ஆசிரியர்களுடன் பகிர்ந்தனர். முடிவில் ஆசிரிய பயிற்றுனர் அகிலா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story