மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

பெரணமல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை முன்பு நடந்தது. வட்டார செயலாளர் சேகரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், பெரணமல்லூர் பேரூராட்சியில் காந்தி நகரில் நடமாடும் நியாய விலை கடை தொடங்க வேண்டும். பேரூராட்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை செயல்படுத்த வேண்டும். பழைய காவல் நிலையம் அருகே உள்ள சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பேரூராட்சி முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வன், இடைக்குழு உறுப்பினர் ராஜசேகரன் அறிவழகன் மற்றும் செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story