ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழா


ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழா
x

புதுக்கோட்டையில் ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரம் ம.தி.மு.க. சார்பில் கட்சியின் 30-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தஞ்சை பிரிவு சாலையில் 30 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியேற்றப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஆரோக்கியசாமி, மூத்த வக்கீல் காசி சிற்றரசு, மாவட்ட பொருளாளர் வக்கீல் ராஜா ஆதிமூலம், மாவட்ட துணை செயலாளர் செல்வராணி உள்பட ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முடிவில் வட்ட செயலாளர் கண்ணதாசன் நன்றி கூறினார்.


Next Story