ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
உசிலம்பட்டியில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
உசிலம்பட்டி,
தமிழக கவர்னர்ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் கைெயழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் கே.பி.ஜெயராமன் தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் த.முனியாண்டி, மாவட்ட கழக அவைத்தலைவர் சக்திவேல், துணைச்செயலாளர்கள் வக்கீல் ஆர்.நடராஜன், அறிவழகன், போடா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டி, நகர் மன்ற தலைவர் சகுந்தலா, கவுன்சிலர் வீரமணி, காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ராஜா, பாஸ்கரபாண்டியன், கம்யூனிஸ்டு கட்சி செல்லக்கண்ணு ராமர், திராவிடர் கழகம் மன்னர் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நகரச்செயலாளர் ஜெ.டி.குமார், ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஓ.பாண்டி செல்வராஜ், மணவாள கண்ணன், ராமு நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.