ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
சாயல்குடி
தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு சாயல்குடியில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நாகராஜ் வரவேற்றார். முன்னாள் கவுன்சிலர் நித்தியானந்தம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, தி.மு.க. சாயல்குடி பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயல்குடி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் மற்றும் வீடுகளில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து வாங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க. தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் கண்மணி புனித ராஜன்,. நகர இளைஞரணி துணை அமைப்பாளர் முனிஸ்வரன், ம.தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் பேட்ரிக். மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ் அன்சாரி. பரமக்குடி நகர் மன்ற தலைவர் குணா. ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன். ஒன்றிய செயலாளர் கதிர்வேல் நாக பாண்டி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.