ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்

கடையநல்லூரில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்தது.
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
Published on

கடையநல்லூர்:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கடையநல்லூரில் நகர ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சுதா.பாலசுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனியல் அருண் சிங், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முகமது பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. நகர செயலாளர் முருகன் வரவேற்றார். தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை கலந்துகொண்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். முடிவில் ம.தி.மு.க. வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிப்பட்டி மணிகண்டன், திட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com