ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
காளையார்கோவில்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் பசும்பொன் மனோகரன், மாவட்ட பொருளாளர் சார்லஸ், காளையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் வைகோ வீரையா மற்றும் காளையார்கோவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, காங்கிரஸ் வட்டார தலைவர் ஆரோக்கியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் உடையார், வி.சி.க. நகரசெயலாளர் வெற்றி விஜயன், மக்கள் நீதி மய்யம் கட்சி குணாஹாசன் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் உடையப்பா, காளையார்கோவில் நகர் செயலாளர் காளைராஜன், சாக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் லோகநாதன், நாட்டரசன் கோட்டை கிருஷ்ணன், காரை கார்த்திக், திலக் சக்கரவர்த்தி மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.