ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
நாசரேத்தில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
தூத்துக்குடி
நாசரேத்:
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதாக கூறி கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி பொறுப்பு நீக்கம் செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நாசரேத் சந்தி பஜாரில் நடைபெற்றது. ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை ப.செல்வம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி முதல் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ரஞ்சன், மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் குரு மத்தேயு ஜெபசிங், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாபுசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story