தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

காட்பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
Published on

காட்பாடியில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்,

முகாமில் நிரந்தர தூய்மை பணியாளர்கள், தனியார் தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் என 464 பேர் கலந்து கொண்டனர்.

முகாம் மூன்று கட்டமாக நடைபெற உள்ளது. முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. வேறு பிரச்சி னைகள் எதாவது இருந்தால் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

முகாமில் தாராபடவேடு டாக்டர் லட்சுமி, சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com