மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நடந்தது.
கரூர்
புகழூர் நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பகுதியைச் சேர்ந்த முல்லைநகர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய திட்டத்திற்கான பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்மற்றும் ஆதார் அட்டையில் பதிவு செய்த செல்போன் எண் கொண்ட செல்போன் ஆகியவற்றை கொண்டு சென்று பதிவு செய்யும் அலுவலரிடம் கொடுத்து காப்பீட்டு திட்டத்திற்கான பதிவுகளை செய்து கொண்டனர். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம்வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
Related Tags :
Next Story