ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்- கண்காணிப்பு அதிகாரி ஜி.பிரகாஷ் தலைமையில் நடந்தது


ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்- கண்காணிப்பு அதிகாரி ஜி.பிரகாஷ் தலைமையில் நடந்தது
x

ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜி.பிரகாஷ் தலைமையில் நடந்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜி.பிரகாஷ் தலைமையில் நடந்தது.

ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையாளருமான ஜி.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத், தூய்மைபாரத இயக்கம், பாதாள சாக்கடை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், இ-சேவை மையம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் எண்ணும் எழுத்தும் இலக்கியம், பள்ளிக்கூட கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் மற்றும் சமூகநலன், மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

டெங்கு காய்ச்சல்

மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அனைத்து பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு, டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை முன்னரே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக கிடைக்கின்ற வகையில் தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் மதுபாலன், ஆர்.டி.ஓ.க்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்ய பிரியதர்ஷினி (கோபி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story