மேகதாது அணை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் ஆலோசனை


மேகதாது அணை :  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் ஆலோசனை
x
தினத்தந்தி 3 July 2023 5:56 AM GMT (Updated: 3 July 2023 6:04 AM GMT)

மேகதாது விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மேகதாது விவகாரம் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக துணை முதல்-மந்திரி கருத்து சர்ச்சையாகி உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வரும் நிலையில் ஆலோசனை நடைபெற்றது.


Next Story