மேலப்பாளையம் போலீஸ் நிலையம் முற்றுகை


மேலப்பாளையம் போலீஸ் நிலையம் முற்றுகை
x

மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் கடந்த 1-ந் தேதி ஒரு காரும், ஆட்டோவும் மோதிக்கொண்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், கார்-ஆட்டோவில் வந்தவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நபர்கள் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்கள். இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் ஊர் பொதுமக்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி சாகுல் அமீது உஸ்மானி, தி.மு.க. பகுதி செயலாளர் துபாய் சாகுல், த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், கவுன்சிலர்கள் ரம்ஜான் அலி, அப்துல் காதர் ஆகியோர் தலைமையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story