ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம்


ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 19 Aug 2023 10:45 AM IST (Updated: 19 Aug 2023 11:05 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம்

சிவகங்கை

திருப்பத்தூர்

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வுக்கு உதவி செய்யும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி துணை முதல்வர் கோபிநாத் தலைமை தாங்கினார். கல்லூரி விலங்கியல் துறை தலைவர் ஆனந்தவள்ளி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி அறிமுக உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் சதீஷ், அறிவியல் பிரசார இணை ஒருங்கிணைப்பாளர் பிரபு, கவுரவ தலைவர் சாஸ்தாசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணை பேராசிரியர்கள் பாலசுந்தரம், விஜய்ஆனந்த், ராமசந்திரன், ஆரோக்கியஜான்பால் ஆகியோர் கருத்துரையாற்றினா்.முன்னதாக விலங்கியல் மன்றத்தின் துணைத் தலைவர் கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையாங்குடி பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

1 More update

Next Story