எம்.ஜி.ஆர். நினைவு தினம்


எம்.ஜி.ஆர். நினைவு தினம்
x

நெல்லை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

நினைவு தினம்

பாளையங்கோட்டை ஒன்றியம் ரெட்டியார்பட்டியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி வி.நாராயணன், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் மணிப்பிள்ளை, லட்சுமணன், பேச்சிமுத்து, சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரப்பாடியில் எம்.ஜி.ஆர். பாசறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பாசறை செயலாளர் குமாரவேல் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் வேல்துரை, பாலகிருஷ்ணன், முருகேசன்யாதவ், சீனிவாசகம், ரத்தினபாண்டி, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.புரம்

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியம் ரெட்டியார்பட்டி ஆர்.எஸ்.புரத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிளை செயலாளர்கள் ராமச்சந்திரன், வெட்டும்பெருமாள், குருநாதன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்

வள்ளியூர் அருகே சவுந்தரபாண்டியபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். படத்துக்கு அ.தி.மு.க. மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பா.நாராயணபெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட பாசறை பொருளாளர் பால ரிச்சர்டு, இளைஞரணி செயலாளர் வள்ளியூர் சுந்தர், கட்சி நிர்வாகிகள் மூக்கன், சவுந்தரபாண்டியன், பால், பிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராதாபுரம்

ராதாபுரத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அ.தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் ஆகியோர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுரேஷ்குமார், கட்சி நிர்வாகிகள் சரவணன், துரைச்சாமி, அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நடுக்கல்லூர்

நெல்லையை அடுத்த நடுக்கல்லூரில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பஞ்சாயத்து துணைத் தலைவர் முருகன், கிளை செயலாளர்கள் கிருஷ்ணன், பாப்பாக்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பேச்சித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுத்தமல்லி விலக்கு பகுதியில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கும் கல்லூர் வேலாயுதம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய இணை செயலாளர் காளியம்மாள், கிளை செயலாளர் மூக்காண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story