விளையாட்டு போட்டிகளை காண பொதுமக்களுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!
மெரினாவில் நடைபெறும் பீச் வாலிபால் போட்டிகளை காண பொதுமக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் வைத்து நடைபெறும் பீச் வாலிபால் போட்டிகளை காண பொதுமக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது;
"முதலமைச்சர் கோப்பை 2023 - மாநில அளவிலானப் போட்டிகள் சென்னையில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு & தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் சென்னை மெரினா கடற்கரையில் இன்று தொடங்கி ஜூலை 11 ஆம் தேதி வரை தினசரி மாலை 4 மணிக்கு நடைபெறுகின்றன. நம்முடைய 18 அணிகள் களத்தில் உள்ளன. அவர்களின் ஆட்டத்தை கண்டுகளித்து உற்சாகப்படுத்துவோம் வாரீர்!" இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story