சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2024 10:15 AM GMT (Updated: 9 Jan 2024 11:23 AM GMT)

அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க தனி இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

'கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் சான்று இனி நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும். தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் சான்றிதழ் இனி நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி பெறுவதில், பல இடர்பாடுகளைக் களைந்து நிலையான இயக்க நடைமுறை வெளியிடப்படும்.

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும். ஜெருசலேம் புனிதப் பயண நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகள் இம்மாதத்தில் வெளியிடப்படும். ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு.

அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க தனி இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்தும் வரும் நிதிநிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும்.

அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதிநிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும்.'

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story