மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்தநகை அடகு வைத்த ரூ.2 லட்சம் திருட்டுகொளத்தூரில் துணிகரம்


மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்தநகை அடகு வைத்த  ரூ.2 லட்சம் திருட்டுகொளத்தூரில் துணிகரம்
x
சேலம்

மேட்டூர்

கொளத்தூரில் விவசாயி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த நகை அடகு வைத்த பணம் ரூ.2 லட்சம் திருட்டு போனது.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விவசாயி

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கத்திரிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா (வயது 55). இவர், தன்னுடைய மனைவியின் மருத்துவ செலவுக்காக நகைகளை கொளத்தூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்தார். பின்னர் அந்த பணம் ரூ.2 லட்சத்தை தனது மோட்டார் சைக்கிளின் முன்பக்க பையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் இருந்த ஹெல்மெட் கீழே விழுந்தது. அதனை எடுத்து விட்டு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை காணவில்லை.

போலீசில் புகார்

இதுகுறித்து கொளத்தூர் போலீசில் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராஜாவின் மோட்டார் சைக்கிளில் இருந்து பணத்தை திருடியவர்கள் யார், எங்கு வைத்து பணம் திருட்டு போனது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story