மக்களை அச்சுறுத்தும் குரங்குகள்


மக்களை அச்சுறுத்தும் குரங்குகள்
x

திருக்கடையூரில் மக்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்;

திருக்கடையூரில் மக்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குரங்குகள் ெதால்லை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஆயுள் விருத்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. இதற்காக கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதிவீதி, தெற்குவீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் தொல்லை தற்போது அதிகரித்து உள்ளது.

வனப்பகுதியில் விட வேண்டும்

குரங்குகள் வீடுகள் மற்றும் கடைகளில் வைத்துள்ள பொருட்களான அரிசி காய்கறி பழவகைகளை தின்று சேதப்படுத்தி வருகிறது. மேலும் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களையும் குழந்தைகளையும், வயதானவர்களையும் கடித்து வருகிறது. மேற்கண்ட பகுதிகள் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே திருக்கடையூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் குரங்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story