ஒரே நாளில் 160-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி ஹோமங்கள்


ஒரே நாளில் 160-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி ஹோமங்கள்
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதன்முறையாக 160-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து கொண்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதன்முறையாக 160-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து கொண்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இங்கு அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அட்டவிரட்ட தளங்களில் ஒன்றான இக்கோவிலில் காலசம்கார மூர்த்தி உற்சவராக அருள் பாலித்து வருவது சிறப்பம்சமாகும்.

இந்த கோவிலில் மணிவிழா சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் உள்ளிட்டவற்றை நடத்துவது ஐஸ்வர்யங்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆயுள் விருத்தி ஹோமம்

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து 160 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக மணி விழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி உள்ளிட்ட யாக பூஜைகள் செய்து திருமணங்களை செய்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் 20 -ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் கோவில் வளாகம் மெயின் ரோடு, சன்னதி வீதி, மேல வீதி, வடக்கு மடவளாகம், தெற்கு மடவளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story