தாய்-குழந்தைகளை தாக்கி வீடு சூறை

தாய்-குழந்தைகளை தாக்கி வீடு சூறையாடப்பட்டது.
தாய்-குழந்தைகளை தாக்கி வீடு சூறை
Published on

ஆலங்குடி:

ஆலங்குடியில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி நதியா(வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், நதியா தனது குழந்தைகளுடன் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர், நதியா இருந்த வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி, அவர்கள் வைத்திருந்த மது பாட்டில்களை வீட்டில் உடைத்துள்ளனர். பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியதுடன் நதியா மற்றும் குழந்தைகளை, தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். நதியாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய அக்கம்பக்கத்தினர் இது குறித்து உடனடியாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார், காயமடைந்த நதியா மற்றும் அவரது குழந்தை களை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்றனர். இது குறித்து நதியா அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com